ஒன்றரை வயது பெண் குழந்தையை ரூ.50,000க்கு விற்ற பெண்

0 8205

நெல்லையில் பெற்ற தாயே தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்காசி ஆலங்குளத்தில் கணவன் கணேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி ரோஸ்லின் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் சொந்த ஊரான வீரவநல்லூரில் தனியாக வசித்து வந்துள்ளார்.

பிரிந்து சென்ற மனைவியையும், குழந்தையை பார்க்க 3 மாதங்களுக்கு பிறகு கணபதி சென்ற நிலையில், ரோஸ்லினிடம் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து விசாரித்ததில் ரோஸ்லின் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததுடன் குழந்தையை யாரோ கடத்தி சென்றதாக கூறியதால், கணேசன் போலீசில் புகார் அளித்தார்.

சந்தேகத்தின் பேரில் ரோஸ்லினிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில், வறுமை காரணமாக உறவினர் சுரேஷ் மூலமாக பள்ளக்கால் புதுக்குடி சேர்ந்த குமார் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.

மேலும், குழந்தை பலரிடம் கைமாறி சென்னைக்கு சென்றதை விசாரணையில் அறிந்த போலீசார், ரோஸ்லின், குமார் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments