சென்னைக்கு அருகே எரிவாயு சுழலி மின் திட்டம் அமைக்கப்படும் - முதல்வர்
அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் 2 எரிவாயு சுழலி மின் திட்டத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் ஐஓசி நிறுவனத்தின் பயோகேஸ் உற்பத்தி மற்றும் உயிர் உர உற்பத்தி பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலியில் துவக்கி வைத்து அவர் பேசினார். அப்போது இதைத் தெரிவித்த அவர், தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் முதலிடத்தில் உள்ளது என்றார்.
மாநிலத்தின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15 ஆயிரத்து 876 மெகாவாட் என அவர் தெரிவித்தார். நாமக்கல், சேலம், புதுச்சத்திரம், ராசிபுரம் ஆகிய இடங்களில் 5 கம்ப்ரஸ்டு பயோ கேஸ் சில்லறை விற்பனை நிலையங்களையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
இந்த காணொலி நிகழ்வில், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Comments