உலகில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.20 லட்சத்தை தாண்டியது

0 1358

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் அத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மருத்துவ சிகிச்சையில் குணமானோரின் எண்ணிக்கை 49 லட்சத்து 63 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுதவிர்த்து பல்வேறு நாடுகளிலும் சுமார் 38 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக திகழும் அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை  23 லட்சத்து 89 ஆயிரமாகவும், பலியானோரின் எண்ணிக்கையும் 1 லட்சத்து 22 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தையும், ரஸ்யாவில் 5 லட்சத்து 99 ஆயிரத்தையும்  கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments