இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவவு
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 4வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 519 புள்ளிகள் உயர்ந்து, 35 ஆயிரத்து 430ல் நிலை கொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 160 புள்ளிகள் அதிகரித்து 10 ஆயிரத்து 471ல் நிலை பெற்றது. படிப்படியாக ஊரடங்கு தளர்வு, தவறாத பருவ மழைப் பொழிவு போன்றவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருவதும் சந்தையின் உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.நடப்பு மாதத்தில் மட்டும் மொத்தம் 21 ஆயிரத்து 763 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 64 காசுகளாக இருந்தது.
Comments