12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து வியாழக்கிழமைக்குள் முடிவு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
எஞ்சியுள்ள சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வுகள் எப்போது நடத்துவது என வியாழக்கிழமைக்குள் முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தேர்வுகளை ஜூலை மாதம் முதல் 2 வாரத்தில் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. கொரோனா அபாயம் இருப்பதால் அதை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி பெற்றோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வியாழக்கிழமைக்குள் முடிவு எடுக்கப்பட்டு விடுமெனவும் தெரிவித்தார்.
ஐசிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கு எஞ்சிய தேர்வுகள் குறித்தும், வியாழக்கிழமைக்குள் முடிவு செய்யப்படுமெனவும் அவர் கூறினார்.
Comments