H-1B மற்றும் இதர வேலை விசாக்கள் ஆண்டு இறுதி வரை ரத்து செய்யப்படும்
இந்த ஆண்டு இறுதி வரைH-1B மற்றும் இதர வேலை விசாக்களை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப், பிரகடனப்படுத்தியுள நிலையில், திறமை அடிப்படையிலான விசா குடியேற்ற முறைக்கு மாறுவதாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி அதிக சம்பளம் பெறும், திறன் மிக்க வெளிநாட்டவருக்கு மட்டுமே வேலை விசாக்கள் வழங்கப்படும்.
டிரம்பின் நடவடிக்கையால், அமெரிக்கர்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் திகைத்துள்ளன.
டிரம்பின் உத்தரவு குறுகிய கண்ணோட்டத்துடன் உள்ளது என டுவிட்டர், அமேசான் ஆகியன விமர்சித்துள்ளன. இந்த உத்தரவு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என டுவிட்டரில் தெரிவித்துள்ள ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, வெளிநாட்டு பணியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments