கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர்

0 2011

கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா பிசோதனை மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்த புகார்களை 104 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியாக குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments