நேபாளத்தில் நதிப்படுகைகளை ஆக்கிரமிக்கும் சீனா
நேபாளத்தின் பல எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்து அங்கு ராணுவ சாவடிகளை சீனா அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்திற்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லையில் கிழக்கு மேற்காக 43 மலைத் தொடர்களும், சிகரங்களும் உள்ளன. அங்கு ஓடும் 11 நதிகளும் இரு எல்லைகளை வரையறுப்பதில் முக்கிய பங்கை ஆற்றுகின்றன.
அதே சமயம் இந்த நதிகள் திசை மாறி பயணிக்கும் போது உருவாகும் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து கொள்வதாகவும், இந்த வகையில் நேபாளத்தின் பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பை அது தனது வசப்படுத்தி விட்டதாகவும் நேபாள வேளாண் துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நேபாளத்தில் போராட்டங்கள் நடந்தாலும் கே.பி.ஒலி தலைமையிலான கம்யூனிச அரசு, சீனாவுக்கு ஆதரவாக அவற்றை அடக்கி விட்டதாக கூறப்படுகிறது.
Comments