டீ வியாபாரியின் மகள், இந்திய விமானப் படையின் போர் விமானியாக நியமனம்
கனவுகளை நினைவாக்குவதில் திடமான உறுதி கொண்டிருந்தால், எந்த தடையும் பொருட்டு இல்லை என்பதை இந்திய விமானப்படை விமானியாக நியமிக்கப்பட்டுள்ள டீ வியாபாரியின் மகள் நிரூபித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் நீமுச்சில் என்ற இடத்தில் 25 ஆண்டுகளாக தேநீர் விற்பனை செய்து வரும் சுரேஷ் கங்வாலின் 24 வயது மகள் அஞ்சல் கங்வால், இந்திய விமானப்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2013 இல் கேதார்நாத் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களின் துணிச்சலை பார்த்து இந்திய விமானப்படையில் சேர மகள் விருப்பம் கொண்டதாகவும் வறுமையால் அந்த கனவை நினைவாக்குவது அவ்வளவு எளிதாக இல்லை என்ற போதிலும் அஞ்சல் உறுதியுடன் முயற்சித்து விமானப்படையில் சேர்ந்ததாகவும் சுரேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அஞ்சல் கங்வாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Comments