சென்னையில் தொற்று பரவல் 66சதவீதமாக குறைந்துள்ளது -அமைச்சர் பாண்டியராஜன்

0 2390
இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு - அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் கொரோனா தொற்று பரவல் 66 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், இந்த மாத இறுதிக்குள் இந்த அளவீடு மேலும் குறையும் என அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்ப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை சந்தித்து ஆலோசனை வழங்கிய பின்னர், அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, இது போன்ற கேள்விகளை செய்தியாளர் சந்திப்பில் கேட்க வேண்டாம் என ஆவேசமாக கடுகடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments