குணமடைந்த நபருக்கு பதிலாக சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி டிஸ்சார்ஜ்
தூத்துக்குடியில் குணமடைந்த நபருக்கு பதிலாக தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளியை மாநகராட்சி ஊழியர்கள் கண்டு பிடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டூவிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதித்து கடந்த 19-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது பெயரை கொண்ட மற்றொரு நோயாளி கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளார்.
இந்த நிலையில், பெயரில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக குணமடைந்த நபருக்கு பதிலாக சிகிச்சையில் இருந்த நபர் நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையறிந்து உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஆட்டோவில் வந்து வீட்டில் இறங்கிய நிலையில் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர் ஒப்படைத்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments