அமெரிக்காவில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு ரெம்டிசிவிர் மருந்து கொள்முதல்
கொரோனா தொற்று சிகிச்சைக்காக மேலும் 500 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை அமெரிக்காவில் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.
ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த பரிட்சாத்த முறையில் 100 மருந்து பாட்டில்கள் அமெரிக்காவில் இருந்து முதலில் வாங்கப்பட்டது. அந்த மருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் 40 நோயாளிகளுக்கு பயன்படுத்தியதில் நல்ல பலன் கிடைத்தது. இதையடுத்து மேலும் 500 மருந்து பாட்டில்களை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.
அந்த மருந்துகள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு ரெம்டிசிவிர் மருந்து கொள்முதல் #Remdesivir #covid19Treatment https://t.co/Kmj04oacSU
— Polimer News (@polimernews) June 23, 2020
Comments