பெங்களூரில் 5 வார்டுகளுக்கு சீல்
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த 5 வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியானோரின் வீடு அல்லது பிளாட்டை தனிமைபடுத்தும் கொள்கை முன்பு கடைபிடிக்கப்பட்டது. தற்போது 5 அல்லது அதற்கு அதிகமாக கொரோனா பாதித்தோர் பகுதியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்தும் புதிய கொள்கையை மாநில அரசு கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி, பெங்களூரு நகரில் சாம்ராஜ்பேட், கலாசிபால்யா, சிக்பேட், சித்தாபுரா, விவி புறம், பைதாராயனபுரா ஆகிய இடங்களில் உள்ள பகுதிகள் ஜூலை 7ம் தேதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளன.
அந்த 5 வார்டுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமென முதலமைச்சர் எடியூரப்பாவுடனான ஆலோசனைக்குப் பிறகு வருவாய்துறை அமைச்சர் அசோகா தெரிவித்தார். இதேபோல் கலபுரகி, யாத்கிர் ((kalaburagi, yadgir)) மாவட்டங்களிலும் புதிய கட்டுப்பாட்டு விதியை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Comments