சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்தது
சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
15 மண்டலங்களிலும் கொரோனாவால் 42 ஆயிரத்து 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,484 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் கொரோனா பாதிப்பு 5,227ஆகவும், தேனாம்பேட்டையில் 5,110ஆகவும், கோடம்பாக்கத்தில் 4,649ஆகவும், அண்ணாநகரில் 4,585ஆகவும் உயர்ந்துள்ளது.
திருவிக நகரில் 3,628ஆகவும், அடையாறில் 2,531ஆகவும், வளசரவாக்கத்தில் 1,784ஆகவும், அம்பத்தூரில் 1,601ஆகவும், திருவொற்றியூரில் 1,587ஆகவும், மாதவரத்தில் 1,191ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவிலிருந்து 23,756 பேர் குணமான நிலையில், 623 பேர் பலியாகியுள்ளனர். இதுதவிர்த்து 18,372 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா பாதித்தோரில் 60 புள்ளி 22 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர். 39 புள்ளி 78 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்தது #Chennai | #Teynampet | #CoronaVirus | #Covid19 https://t.co/WiuL7oSBsF
— Polimer News (@polimernews) June 23, 2020
Comments