5 தூதரக அதிகாரிகள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

0 2261
5 தூதரக அதிகாரிகள், அலுவலர்களை விடுவித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சாலைவிபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 2 அதிகாரிகள் உட்பட 5 இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியா திரும்பியுள்ளனர்.

அவர்களை பாகிஸ்தான் அரசு வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது. கேப்டன் மனு மிதா, தூதரக செயலாளர் சிவகுமார் மற்றும் தூதரக அலுவலர்கள் பங்கஜ், செல்வதாஸ் பால், மற்றும் திவிமு பிரம்மா ஆகியோர் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரண்டு தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கும் இஸ்லாமாபாதில் இந்திய தூதரக அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதற்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு அலுவலர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் 3 பேரையும் இந்தியா அனுப்பி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.காரில் வாகா எல்லைவரை அழைத்து வரப்பட்ட 5 பேரும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments