வீடுகளுக்கான பிராட்பேண்ட் உரிமக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு பரிசீலனை எனத் தகவல்

0 1532

வீடுகளுக்கான பிராட்பேண்ட் உரிமக் கட்டணத்தை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் பலர் வீடுகளில் இருந்தபடி இணைய உதவியுடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வீடுகளுக்கு பிராட்பேண்ட் சேவைகளை வழங்க நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் ஆண்டுக்கு 1 ரூபாய் என்ற வகையில் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக பிராட்பேண்ட் சேவைகளுக்கான உரிமக் கட்டணம் மொத்த வருவாயில் 8 சதவீதமாகக் கணக்கிட்டு ஆண்டுக்கு சுமார் 880 கோடி ரூபாய் வசூலிக்கப்படும். இதனை மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு கொண்டு செல்லும் முன் தொடர்புடைய அமைச்சகங்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்டணக் குறைப்பு கொண்டு வரப்பட்டால் ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட 350 இணையதள சேவை நிறுவனங்கள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது. எனினும் வணிக நிறுவனங்களுக்கான இணையதள சேவைகளுக்கான கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments