இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மீது கேரள அரசு அதிருப்தி?
இந்திய வரலாற்றில் முதல்முறையாக வானிலை எச்சரிக்கைகளை பெற கேரள அரசு, மூன்று தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கேரளாவில் மழைக்காலத்திற்கு முன்னதாக 15 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கூறியதாகவும், ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் அதை நிறைவேற்றவில்லை எனவும் கடந்த ஏப்ரல் மாதம் அம்மாநில அரசு அதிருப்தி தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ஸ்கைமெட் பிரைவேட் லிமிடெட், எர்த் நெட்வொர்க்குகள் மற்றும் ஐபிஎம் வானிலை நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து, ஓராண்டிற்கு வானிலை எச்சரிக்கை சேவைகளை பெற 95 லட்ச ரூபாய் செலவில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
Comments