பெரும்பாலான எம்.பிக்கள்., கிராமங்களை தத்தெடுக்கவில்லை என தகவல்
பிரதமரின் கிராம வளர்ச்சி திட்டம் அதன் நோக்கத்தை முழுமையாக அடையவில்லை என்பதால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மறு ஆய்வு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஒவ்வொரு எம்.பியும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை முன்மாதிரி கிராமமாக உருவாக்கும் வகையில், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2014-ல் பிரதமர் மோடி அறிவித்தார்.
இத்திட்டத்தின் பலனை மதிப்பீடு செய்ய அமைக்கப்பட்ட மறு ஆய்வு ஆணையத்தின் அறிக்கையில், பிரதமரின் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெரும்பாலான எம்.பி.,க்கள், கிராமங்களை தத்தெடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கும் எம்.பி.,க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.
Comments