மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1102
அணிவகுப்பிற்கான ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய முப்படை வீரர்கள்

மூன்று நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா புறப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாலை மாஸ்கோ சென்றடைந்தார்.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75ம் ஆண்டு நிறைவு விழா மாஸ்கோவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க சென்ற ராஜ்நாத் சிங்கை, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதனிடையே, விழாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோ சென்றுள்ள, 75 பேர் கொண்ட இந்திய முப்படை வீரர்கள் அணிவகுப்பிற்கான ஒத்திகையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments