புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ஊடுருவல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் நடத்த ஊடுருவிய தீவிரவாதிகள் சிலரின் சதித்திட்டத்தை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.
நீண்ட நேரமாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு துணை ராணுவ வீரரும் இந்த சண்டையில் உயிரிழந்தார். தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை காலை வரை நீடித்து வருகிறது. அங்கு பெரும் சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது போல் ஓசை கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments