கொரோனா மின்னல் பாய்ச்சல்..! உச்சம் தொட்ட அச்சம்

0 7754

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதேபோல, கொரோனா உயிர்ப்பலி 14 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 821 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

அதே போல் ஒரே நாளில், 445 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால், கொரோனா உயிர்ப்பலி 14 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் , தொடர்ந்து பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மட்டும் 6 ஆயிரத்து 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால், பாதிப்பு பட்டியலில் தமிழகத்தை தாண்டி, டெல்லி மீண்டும் 2- ஆவது இடத்திற்கு சென்றது.

குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது.

உத்தரபிரதேசத்தில் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், ராஜஸ்தானில் சுமார் 15 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 12 ஆயிரத்தையும் நெருங்கி உள்ளது.

ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments