அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு, உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

0 1718
அமைச்சர் வீரமணிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அமைச்சர் கே.சி.வீரமணி, ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தங்கள் நிலத்தை அபகரித்ததாகக் கூறிக் காட்பாடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து முதலமைச்சருக்குப் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது மனுதாரரின் புகார் குறித்து மேற்கொண்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிய வந்ததாகவும், இந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது எனவும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments