தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் கொரோனா கட்டுக்குள் வரும் - அமைச்சர் பாண்டியராஜன்

0 6239
விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க கொரோனா பாதிப்பு குறையும்-பாண்டியராஜன்

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் சென்னை உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமையும், பெரம்பூர் மருத்துவ சுகாதார மையத்தையும் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க கொரோனா பாதிப்பு குறையும் என்றார்.

தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவ சேவைகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்கு மேல் ஊரடங்கை நீட்டித்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார். எனவே உயிரை கொடுத்தாவது கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments