திருவாரூர் மத்திய பல்கலை.யின் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு ரத்து
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி தொடங்கவிருந்த ஆன்லைன் பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதுமுள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கவிருந்த இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகளை மத்திய தேர்வு கட்டுபாட்டுதுறை ரத்து செய்துள்ளதாக திருவாரூர் மத்தியபல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், முந்தைய பருவதேர்வு மதிப்பெண், வருகை பதிவேடுகளின் படி சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலை.யின் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு ரத்து #Thiruvarur #coronavirus #Covid19 #OnlineExams https://t.co/mcGV3DbxHv
— Polimer News (@polimernews) June 22, 2020
Comments