மன்மோகன் ஆட்சிக் காலத்தில் 600 முறை சீன ஊடுருவல்கள் - J.P.நட்டா குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர்கள் இந்திய நிலப்பரப்பு சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டதை மறந்து விட்டு, பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சிப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2010 முதல் 2013 வரையிலான காலத்தில்,600 க்கும் மேற்பட்ட தடவைகள் சீனா இந்தியாவில் ஊடுருவல் நடத்தியதாகவும் தமது டுவிட்டர் பதிவில் நட்டா குறிப்பிட்டுள்ளார்.
சீனப்படைகள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியது குறித்து விமர்சித்த மன்மோகன் சிங், அதை சீன ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக சித்தரித்துள்ளதாவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
Comments