கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு ; எகிறியது கிளென்மார்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பு!

0 15010

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் கண்டுபிடித்த அந்த மாத்திரைக்கு ஃபேவிபிராவிர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாத்திரை ஒன்றின் விலை ரூ. 103 ஆகும். 200 மில்லிகிராம் அளவில் 34 மாத்திரைகள் கொண்ட அட்டையின் விலை ரூ. 3,500 ஆகும். லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு இந்த மாத்திரையை கொடுத்தால், 88 சதவிகிதம் வரை குணமாகியுள்ளதாக கிளென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு வாய் வழியாக கொடுக்க அனுமதிக்கப்பட்ட முதல் மருந்து இதுதான். இந்த மருந்துக்கு மருத்துவத்துறையில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பை பங்கு சந்தையில் கிளென்மார்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40 சதவிகிதம் உயர்ந்து ரூ. 573.05 க்கு விற்பனையானது. குஜராத்தில் அங்லேஷ்வர் தொழிற்சாலையில் இந்த மாத்திரைக்ககான மூலக்கூறுகளை உருவாக்கும் கிளென்மார்க் நிறுவனம் ஹரியானாவில்பெத்தி என்ற நகரத்திலுள்ள தொழிற்சாலையில் மாத்திரைகளை தயாரிக்கிறது. முதல் மாதத்திலேயே 82,000 கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரைகளை தயாரித்து இந்த நிறுவனத்தால் வழங்க முடியும். மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல்கள் மூலம் இந்த மாத்திரைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், கோவிட் -19 நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் மருந்தின் குணப்படுத்தும் தன்மை அதன் நீடித்த ஆற்றல் அவற்றை கணக்கில் கொள்ள வேண்டியது இருக்கிறது. அதனால், இந்த சமயத்திலேயே ஃபேவிபிராவிர் மருந்து பங்கு சந்தையில் ஏற்படுத்தும்  தாக்கத்தை கணித்து விட முடியாது என்கின்றனர்.  ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டிஸின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஒரு கொரோனா  நோயாளிக்கு அதிகபட்ச சிகிச்சை செலவு, ரூ.  12,566 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments