ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

0 1448

தமிழக அரசின் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் ஆகிய துறைகளில் சிறந்த ஒருவருக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுடன் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று அளிக்கப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படவிருக்கும் இவ்விருதினை பெற தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அரசு முதன்மைச் செயலாளர், உயர் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments