உலக கொரோனா : சுமார் 48 லட்சம் பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ்

0 2428

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற சுமார் 48 லட்சம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 

பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், கொரோனா பாதிப்பு 23 லட்சத்தையும், உயிர்ப்பலி ஒரு லட்சத்து 22 ஆயிரத்தையும் தாண்டி விட்டது.

பிரேசிலில், 10 லட்சம் பேர் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட அங்கு, உயிரிழப்பு 50 ஆயிரத்தை கடந்து விட்டது. ரஷியாவில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 728 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, 24 மணி நேரத்தில் அங்கு 109 பேர் பலி ஆகி விட்டனர்.

இங்கிலாந்து, ஸ்பெயின், பெரு, இத்தாலி, சிலி, ஈரான், ஜெர்மனி, துருக்கி மற்றும் மெக்சிகோ என பல்வேறு நாடுகளிலும் வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 951 பேரும், சவுதி அரேபியாவில் 3  ஆயிரத்து 379 பேரும் கொரோனாவால் பாதிக்கப் பட்ட னர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments