அதி தீவிர முழு ஊரடங்கு வீடுகளில் முடங்கிய மக்கள்

0 9157

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அதி தீவிர முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச் சோடி காணப்பட்டன. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில், இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எவ்வித தளர்வு களு மின்றி, கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக் கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நள்ளிரவு முதலே, சென்னையை யொட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தீவிர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்க, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

வட சென்னையின் வியாசர்பாடி - புளியந்தோப்பு பகுதிகளில், டிரோன் காமிரா மூலம் கழுகுப்பார்வையில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

புளியந்தோப்பு பகுதியில் முக கவசம் அணியாமலும், விதிகளை மீறியும் வெளியே சுற்றிய இளைஞர்களை எச்சரித்த போலீசார், 50 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

வண்ணாரப்பேட்டை பகுதியில் காவல்துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து செல்போன் மூலம் பதிவு செய்தார். இளைஞரை கீழே வரவழைத்து எச்சரித்த போலீஸ் அதிகாரி சுப்புலட்சுமி, செல்போனை பறிமுதல் செய்தார்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அம்மா உணவகங்கள் திறந்திருந்தபோதிலும் தனி நபர் இடைவெளியை பின்பற்றி மக்கள் காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம் உள்ளிட்டவைகளை இலவசமாக வாங்கி சாப்பிட்டனர்.

மொத்தத்தில் அதி தீவிர முழு ஊரடங்குக்கு, மக்கள், முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதிகாலை 6 மணி வரை, இந்த முழு ஊரடங்கு நீடிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments