தண்ணீரில் தொடர்ந்து 2 மணி நேரம் மிதந்தபடி யோகாசனம் செய்த காவலர்

0 2630

மத்திய பிரதேசத்தில் தலைமை காவலர் ஒருவர், தண்ணீரில் தொடர்ந்து 2 மணி நேரம் மிதந்தபடி பல்வேறு யோகாசனங்களை செய்துள்ளார்.

சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி அரசியல் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் யோகாசனங்களை செய்த காட்சிகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், தமோவா மாவட்டத்தை  சேர்ந்த தலைமை காவலரான பி.டி. தாஹியா ((BD Dahiya)) என்பவர், அங்குள்ள கோயில் குளம் ஒன்றில் தொடர்ந்து 2 மணி நேரம் மிதந்தபடி  யோகாசனங்களை செய்தார்.

சுமார் 100 கிலோ அளவு உடல் எடை கொண்ட அவர், தண்ணீரில் மூழ்காமல் மேற்பரப்பில் மிதந்தபடி, தரையில் நின்றும், அமர்ந்தும் செய்வது போன்ற யோகாசனங்களை செய்து அசத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments