அச்சம் கொரோனா உச்சம் எகிறும் பாதிப்பு
கொரோனாவின் வீரியம் உச்சம் எட்டி வரும் சூழலில், நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயின் மீட்பு விகிதம் 55 புள்ளி 49 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில், 15 ஆயிரத்து 413 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 306 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர். இதனால், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 4 லட்சத்து 12 ஆயிரத்தையும், கொரோனா உயிர்ப்பலி, 13 ஆயிரத்தையும் தாண்டியது.
ஒரே நாளில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம் பரிசோதனைகளின் எண்ணிக்கை 68 லட்சத்து 7 ஆயிரமாக உயர்ந்தது.
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் அத்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 205ஆக அதிகரித்தது. புனேவில் ஒரே நாளில் 823 பேரும், மஹாராஷ்டிரா காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தமிழகம், இந்த பட்டியலில் தொடர்ந்து, 2- வது இடம் வகிக்கிறது. அதேநேரம், டெல்லியில் கொரோனா பாதிப்பு , தமிழகத்தை நெருங்கும் அளவுக்கு உயர்ந்தது.
குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை எட்டும் அளவுக்கு அதிகரித்தது.
உத்தரபிரதேசத்தில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், ராஜஸ்தானில் சுமார் 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்தையும் தாண்டியது.
ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா. தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.
நாடு முழுவதும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, ஒரே நாளில் மட்டும் 13 ஆயிரத்து 925 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனா வின் பிடியில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்தைத் தாண்டியது.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் 55 புள்ளி 49 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#CoronaVirusUpdates: #COVID19 India Tracker
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) June 21, 2020
(As on 21 June, 2020, 08:00 AM)
➡️Confirmed cases: 410,461
➡️Active cases: 169,451
➡️Cured/Discharged/Migrated: 227,756
➡️Deaths: 13,254#IndiaFightsCorona#StayHome #StaySafe @ICMRDELHI
Via @MoHFW_INDIA pic.twitter.com/MGgm7yzRIv
Comments