"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அமெரிக்காவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 22,54,662 ஆனது
அமெரிக்காவில் சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 33,701 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையையும் சேர்த்து அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,54,662 ஆக அதிகரித்துள்ளது. 607 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானதால் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,19,719 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே புளோரிடா, ஜார்ஜியா, சவுத் கரோலினா, டெக்சாஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் தென் மாநிலங்களில், 20 க்கும் 30 க்கும் இடையிலான வயதுடைய இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு அதிக எண்ணிக்கையில் ஆளாவதாக அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி சரியாக கடைப்பிடிக்கபடாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
Comments