தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

0 2497

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்குப் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments