பிரதமர் மோடியின் உரையை நீக்கிய சீன சமூக வலைதளங்கள்
கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த கருத்துக்கள், சீன சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டியில் வெய்போ மற்றும் வி-சாட் ஆகிய செயலிகள் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், லடாக் விவகாரத்தில் இந்தியா அமைதியை விரும்பினாலும், சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும் என மோடி கூறிய கருத்து அவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சீனா தனது நடவடிக்கைகளை அதன் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதியில் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும் என, வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்த கருத்தும் நீக்கப்பட்டதாக, சீனாவிற்கான இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments