சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 2 சிறப்பு விமானங்கள்
சீனாவில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர இரண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் திட்டத்தின் கீழ் இரண்டு கட்டமாக இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கட்டமாக 600 சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்குகிறது. இதில் சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. முதல் விமானம் நேற்று இரவு 10 மணிக்கு ஷாங்காயில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது.
இரண்டாவது விமானம் 29ம் தேதி குவாங்சோவில் இருந்து டெல்லிக்கு வரும் 29ம் தேதி இயக்கப்பட உள்ளது. இரண்டு விமானங்களிலும் சுமார் 500 பயணிகள் சீனாவில் இருந்து இந்தியா திரும்புகின்றனர்.
Comments