தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2396 பேருக்கு கொரோனா உறுதி

0 8541

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு, 4- வது நாளாக உயர்ந்து உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவில், ஒரே நாளில், 33 ஆயிரத் திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 396 பேரு க்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது.

கொரோனாவுக்கு, ஒரே நாளில் 38 பேர் பலி ஆனார்கள். இவர்களில் 2 பெண்கள் உள்பட 14 பேர் தனியார் மருத்துவமனைகளில் இறந்தனர். திருவள்ளூரைச்சேர்ந்த 26 வயது ஆண் ஒருவரும், சென்னையைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவரும் அரசு மருத்துவ மனைகளில் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 45 பேர், டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால், இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக் கை 31 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேநேரம், பல்வேறு மருத்துவ மனைகளில் சுமார் 25 ஆயிரம் பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒரே நாளில், அதிகபட்சமாக 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதுவரை 8 லட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை, மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments