சீனாவை அடக்க சிறந்த 5 வழிகள்..!

0 11330

எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்தால், அதனுடன் போர் எதையும் செய்யாமல், அதற்கு கடிவாளம் போடுவதற்கான சிறந்த 5 வழிகளை சிலர் பரிந்துரைத்துள்ளனர்.

முதலாவதாக, திபெத்தை சீனா ஆக்கிமித்து வைத்திருக்கும் விவகாரத்தை இந்தியா ஐநா சபையில் எழுப்பி அதன் கவனத்தை திசை திருப்பலாம்.

இரண்டாவதாக, ஷின்ஜியாங் மாகாணத்தில், சீனா தனது சொந்த குடிமக்களான உய்கார் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்துள்ளது. இந்த விவகாரத்தை ஐநா வில் எழுப்பி சீனாவின் முகத்திரையை இந்தியா கிழிக்கலாம்.

சீனா உடனான வர்த்தக உறவை புறக்கணிப்பது மூன்றாவது  பரிகாரமாக பார்க்கப்படுகிறது. சீனா உடனான வர்த்தகத்தில் சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. மேக் இன் இந்தியா போன்ற உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை நாம் தொடர்ந்து மேற்கொண்டாலும், சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நான்காவதாக, தைவான் மீது தனக்கு இருப்பதாக கூறும் சீனாவின் இறையாண்மையை அலட்சியப்படுத்தி விட்டு, தைவானை தனி நாடாக கருதி அதற்கு அங்கீகாரம் அளிப்பதில் இந்தியா ஈடுபடலாம். ஐநா சபையில் ஐம்மு காஷ்மீர் பற்றி சீனா தொடர்ந்து பிரச்சனை எழுப்பும் போதும், இந்தியா - தைவான் விவகாரத்தில் இதுவரை மவுனமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது வழிமுறையாக, தென் சீனக் கடல் நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற வற்றுக்கு நமது பிரம்மோஸ், ஆகாஷ் போன்ற நவீன ஏவுகணைகளை விற்கலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments