சீனாவின் விவோ ஐபிஎல் விளம்பரதாரர் ஒப்பந்தம் மறுஆய்வு
சீனாவின் விவோ நிறுவனத்துடன் செய்துள்ள விளம்பரதாரர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
ஐபிஎல் விளையாட்டு அமைப்பின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கச் சீனாவின் விவோ நிறுவனத்துடன் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு வரைக்கும் இருக்கும் நிலையில், லடாக்கில் சீனப் படையினரின் தாக்குதலால் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியாவில் எழுந்துள்ளது.
இதனால் விவோ நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
விவோ நிறுவனம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு ஆண்டுக்கு 440 கோடி ரூபாய் வழங்குவதும், இதில் 42 விழுக்காடு அரசுக்கு வரியாகச் செலுத்தப்படுவதும் குறிப்பிடத் தக்கது.
Comments