மும்பை தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்
மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2008 நவம்பர் 26 மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 166 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கனடா வாழ் பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோவில் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான்.
10 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்த ராணா,கொரோனா தொற்று உள்ளதாக நீதிமன்றத்தில் சொன்னதால், கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டான். இந்த நிலையில் இந்தியாவின் ஒப்படைப்பு கோரிக்கையை ஏற்று கடந்த 10 ஆம் தேதி ராணாவை மீண்டும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Pak-origin plotter of 26/11 attacks arrested in US, faces extradition https://t.co/mBeioRc6Kt pic.twitter.com/7yx5VxHXqU
— NDTV (@ndtv) June 20, 2020
Comments