சென்னையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

0 3903

சென்னை காவல் துறையில் பணியாற்றி வரும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லி காவல் துறைக்கு அடுத்ததாக, தமிழக காவல் துறையில் அதிகம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை காவல்துறையில், இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அதில் 300-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை காவல் துறையில் பணியாற்றி வரும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அந்த அதிகாரி சென்னை காவல் இணை ஆணையராக உள்ளார்.

லேசான அறிகுறி மட்டும் இருப்பதால் வீட்டில் தன்மைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை காவல் துறையில் கூடுதல் ஆணையர், துணை ஆணையர்கள் இருவர் என தொற்றிலிருந்து மீண்டு வந்து பணியாற்றி வருகின்றனர். அனைவரும் கூடுதல் தற்காப்புடன் பணியாற்ற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments