காலாபாணி அருகே சாலை, ராணுவ முகாம்... வரலாற்றில் முதல் முறையாக இந்திய எல்லையில் படைகளைக் குவிக்கும் நேபாளம்

0 17400

ந்திய எல்லைக்குள் உள்ள காலாபாணி, லிப்பியதூரா, லிப்போலெக் ஆகிய பகுதிகளை  நேபாள அரசின் வரைபடத்தில் சேர்த்து, அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நேபாள பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒலி. கொண்டு வந்த  திருத்தத்துக்கு அந்த நாட்டு  குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்ட நிலையில் சட்டமாகியிருக்கிறது.இதையடுத்து நேபாள அரசு காலாபாணி அருகே இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ முகாம், சாலை அமைக்க முடிவு செய்துள்ளது நேபாள அரசு. இந்திய எல்லைப் பகுதி அருகே புறக்காவல் நிலையம் ஒன்றையும் அமைத்து நேபாள வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

image

நேபாள ராணுவத் தலைமைத் தளபதி பூர்ணா சந்திர தாபா புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையன்று  சர்ச்சைக்குரிய கலாபானி எல்லைப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேபாள அரசின் வெளிநாட்டு விவகாரத் துறையின் துணைத் தலைவரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான பிஷ்ணு ரிஜால், "எல்லைப் பகுதியில் ராணுவ முகாம்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். தற்போது எல்லைப் பகுதியை நேரடியாகச் சென்றடையச் சாலை வசதிகள் எதுவும் இல்லை. ராணுவத் தளவாடங்களை எளிதில் கொண்டு செல்லும் வகையில் காலாபாணி அருகே இருக்கும் சங்ரு வரை சாலை அமைத்து, ராணுவ முகாம்கள்  அமைக்கவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார் 

image
நேபாள பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒலி

எல்லைப் பகுதியில் ராணுவ முகாம் , சாலை அமைக்கும் நேபாள ராணுவத்தின் செயல் இந்தியாவைக் கோபமடையச் செய்திருக்கிறது. இந்திய படைகளும் தயார் நிலையில் உள்ளன.  ஏற்கெனவே லடாக் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.  இந்த நிலையில், நேபாள ராணுவமும் எல்லையில் பிரச்னைகளை ஏற்படுதித்துவது இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

சுமார் 1751 கி.மீ தூரத்துக்கு இந்தியாவும்  - நேபாளமும் எல்லையைப் பகுதியைப் பகிர்ந்துகொள்கின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைந்த பட்சம் 200 புறக்காவல் நிலையங்களை இந்த எல்லைப்பகுதி அருகே உருவாக்க நேபாளப் பிரதமர் திட்டமிட்டிருப்பதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள அரசு இந்திய எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கப் புறக்காவல் நிலையங்களை அமைப்பது இதுவே முதல் முறை.

1768 - ம் ஆண்டு உருவாக்கப்பட்ட  நேபாள ராணுவத்தில்  நேரடியாகவும் ரிசர்வ் பணியாளர்களாகவும் சுமார் 1,50,000 பேர் பணிபுரிகிறார்கள் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments