மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மேலும் 11 இடங்கள் கிடைத்தன

0 3851

மாநிலங்களவைத் தேர்தலில் மேலும் 11 இடங்கள்  கிடைத்திருப்பதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101ஆக அதிகரித்துள்ளது. 

24 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக வேட்பாளர்கள் எரன கடாடி, அசோக் கஸ்தி (Eranna Kadadi and Ashok Gasti) ஆகியோரும், அருணாசலில் பாஜக வேட்பாளர் நபாம் ரேமியா (Nabam Rebia) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து 8 மாநிலங்களிலுள்ள 19 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 8    பாஜக வேட்பாளர்கள் வென்றனர்.  இதனால் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 101ஆக அதிகரித்துள்ளது.

இதில் பாஜகவுக்கு மட்டும் 86 இடங்கள் உள்ளன. மாநிலங்களவையில் 123 இடங்களை பெற்றால் பெரும்பான்மை பெற முடியும்.   இருப்பினும், அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளிக்கும்பட்சத்தில், முக்கிய மசோதாக்களை   பாஜக கூட்டணியால்  எளிதில் நிறைவேற்ற முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments