ரபேலை இந்தியா தேர்வு செய்தது ஏன்?

0 19028

5 ஆம் தலைமுறை போர் விமானமான  நவீன  ஜே 20 விமானங்களுடன் சீனா தயாராக இருக்கும் நிலையில், இந்தியா, 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ரபேலின் நான்காம் தலைமுறை விமானங்களை தேர்வு செய்ததற்கு  காரணம் என்ன என போர் விமானத் துறை தொடர்பான நிபுணர் டேனியல் ஷாஸ்லி (Daniel Shazly) விளக்கம் அளித்துள்ளார்.

இடையிடையே எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லாமல், எதிரி நாட்டில் பல மைல் தூரம் ஊடுருவி சென்று, அணு ஆயுதங்களை போடக்கூடிய விமானம் இந்தியாவின் தேவையாக உள்ளது. அவற்றை வழங்க தயாராக இருந்தாலும், அணு ஆயுதங்களை பொருத்துவதற்கான ரகசிய கோடுகளை தர சில ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் முன்வரவில்லை.

ரஷ்யா அதற்கு முன்வந்தாலும், அதன் விமானங்களின் வேகமும், இதர போர்க்குணங்களும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இந்த நிலையில் அணு ஆயுதங்களை பொருத்துவதற்கான ரகசிய கோடுகளுடன் கூடிய ரபேல் விமானங்களை தர பிரான்ஸ் முன்வந்துள்ளது.

Su-30MKI விமானங்கள் ரேடாரில் தெரியும் என்றிருக்கும் போது,  நவீன ரேடார் எச்சரிக்கை மற்றும் அதில் இருந்து தப்பித்துச் செல்லும் வசதிகள், குறைந்த ஆர்சிஎஸ் ஆகியன ரபேலில் உள்ளன. அத்துடன் இந்திய மிராஜ் 2000 விமானங்களில் அளிக்கப்படும் பயிற்சிகளுடன் ஒருங்கிணைந்து ரபேல் விமான பயிற்சியையும் மேற்கொள்ள முடியும்.  கம்ப்யூட்டர் சிமுலேஷன் பயிற்சியையும் வெற்றிகரமாக நடத்த முடியும். 

தாழ்வான உயரத்தில் Su-30MKI-ஐ விடவும் மிகவும் வேகமாக பறக்கும் திறன் ரபேலுக்கு உள்ளது. Su-30MKI- தாழ்வாக பறக்கும் போது ஏற்படும் காற்றுத் தடையால் போர்விமானிகள் அடிக்கடி சோர்வடைகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு போர் விமானிகளுடன்  குறைந்த உயரத்தில், அதி வேகத்தில் அணு ஆயுதங்களுடன் பறக்கும் திறன் கொண்டது ரபேல் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

வேறு என்ன தேர்வுகள் என்று பார்த்தால் Su-57 இப்போது இல்லை, அமெரிக்காவின் F-22 போர் விமானங்களை விற்க அந்த நாட்டு சட்டம் அனுமதிப்பதில்லை, F-35 விமானங்களை விற்க அமெரிக்கா இதுவரை முன்வரவில்லை. எனவே இந்தியாவின் தேவைக்கு இப்போதுள்ள ஒரே தேர்வு ரபேல் மட்டுமே.இதை அடுத்தே,  Su-30MKI விமானங்கள் காலாவதியாகும் நிலையில், ரபேல்தான் கிடைக்கும் விமானங்களில் சிறந்தது என்ற தேர்வுக்கு இந்தியா வந்துள்ளது.இந்த நிலையில் குறைவான செலவில் நவீன 5 ஆம் தலைமுறை  J-20, J-31 போர்விமானங்களை  சீனா உருவாக்கி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments