10ஆம் வகுப்பு மாணவிகள் சிலரின் விடைத்தாள்கள் மாயம்.. ரகசியமாக மறுதேர்வு..?
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிகள் சிலரின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகிவிட்டதாகக் கூறி அவர்களை ரகசியமாக மீண்டும் தேர்வு எழுதவைத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
கொரோனா பரவலின் எதிரொலியாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த அரசு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கிட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 15க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு மாணவிகளின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மாயமாகி விட்டதாகக் கூறி அங்குள்ள தனியார் பயிற்சி மையம் ஒன்றில் அவர்களுக்கு மறுதேர்வு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை மறுத்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், 4 மாணவிகளின் பெற்றோரை மட்டும் வரவழைத்து, மதிப்பெண் அட்டையில் கையொப்பம் வாங்கப்பட்டதாக தெரிவித்தார்.
10ஆம் வகுப்பு மாணவிகள் சிலரின் விடைத்தாள்கள் மாயம்.. ரகசியமாக மறுதேர்வு..? #10thStudents | #Krishnagiri https://t.co/VUlOlD7tSu
— Polimer News (@polimernews) June 19, 2020
Comments