10, 11ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி
10 மற்றும் 11ஆம் வகுப்ப காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணாக்கர்கள் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெறச் செய்யும்படி, அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகள், 11ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வுகளுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவீதமும் மதிப்பெண்கள் அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் தேர்ச்சியடையவில்லை என்று தகவல் வந்தது.
இந்நிலையில், அரசு தேர்வுகள் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர் எனவும், இதை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் அறிவுறுத்தியுள்ளார்.
Comments