இந்தியாவுக்கு மீண்டும் வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை வழங்க அமெரிக்கா பரிசீலனை
இந்தியாவிற்கு வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்குவது பற்றி பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறிள்ளது.
இந்தியா, வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை பெற்றிருந்ததால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதியான பல்வேறு பொருட்களுக்கு 190 மில்லியன் டாலர் அளவிற்கு வரிச் சலுகை கிடைத்தது. ஆனால், இந்திய சந்தையை சமமாக அணுக அனுமதிக்கவில்லை என்று கூறி, முன்னுரிமை வர்த்தக நாடு என்ற தகுதியை அமெரிக்கா ரத்து செய்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமையை மீண்டும் வழங்கும்போது, அதற்கு ஈடான பலன்களை அமெரிக்காவுக்கு தர இந்தியா முன்வரும் பட்சத்தில் பழைய அந்தஸ்து மீட்டமைக்கப்படும் என்று அமெரிக்க செனட் சபையின் நிதிக் குழுவுக்கு, அந்நாட்டு வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசர் விளக்கம் அளித்துள்ளார்.
வாஷிங்டன் மாநிலத்தில் இருந்து செல்லும் ஆப்பிள்கள், Montana மாநிலத்தில் இருந்து செல்லும் பருப்புகளுக்கு இந்தியா கடும் வரி விதிப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்தியாவுடன் பெரிய அளவிலான வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், லைத்தீசர் கூறியுள்ளார்.
Comments