மின்சாரக் கார்களின் உதிரிப் பாகங்களுக்குச் சீனாவைச் சார்ந்திருக்க முடியாது - நிதின் கட்கரி
மின்சார வாகனங்களின் உதிரிப் பாகங்களுக்குச் சீனாவைச் சார்ந்திருக்கக் கூடாது என்றும், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி என்னும் தலைப்பில் காணொலிக் கருத்தரங்கில் அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது, இறக்குமதி செய்து வரும் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான கொள்கையை அரசு உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மின்சாரக் கார்களுக்கான பாகங்களைச் சீன நிறுவனங்கள் கட்டுப்படியான விலையில் வழங்க முன்வந்துள்ளபோதும், எதிர்காலத்தில் விலையை உயர்த்தி விடுவார்கள் எனத் தெரிவித்தார்.
இதனால் நீண்டகாலத்துக்குச் சீனாவைச் சார்ந்திருக்க முடியாது என்றும், அதற்குப் பதில் ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
Comments