தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டு வரை சிறை-சிலி அரசு

0 1386

சிலியில் தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்துள்ளார்.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நோய் பரவலை தடுக்க 3 மாதத்துக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், தலைநகர் சாண்டியாகோவில் வாரத்தில் 5 முறைக்கு பதில் 2 முறை மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு இந்திய மதிப்பில் 9 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments