சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரம்
இந்திய வீரர்கள் 20 பேரை லடாக் எல்லையில் கொன்ற சீனாவின் மீது நாடு தழுவிய ஆத்திரம் அதிகரித்துள்ளது. கவுஹாத்தி போன்ற பல்வேறு பகுதிகளில் சீனப்பொருட்களை வாங்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் காணொலி மூலம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிதின் கட்கரி, சீனாவின் மீது உலகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார்.
சீனாவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். இத்தகைய சூழ்நிலையில் இந்தியா தனது உற்பத்தியை பெருக்கிக் கொண்டு இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.
Comments