கொரோனா என வெளியான தகவல்களுக்கு அமைச்சர் கே.பி. அன்பழகன் மீண்டும் மறுப்பு
கொரோனா பாதிப்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்திகளை தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் மறுத்துள்ள அமைச்சர், தமக்கு கொரோனா இல்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல் தனக்கு இருந்த காய்ச்சல் சரியாகி விட்டது என்று தெரிவித்துள்ள அமைச்சர், மக்கள் பணியில் இருக்கின்ற காரணத்தால் வாரத்துக்கு ஒரு முறை தொடர்ச்சியாக கொரோனா சோதனையை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமைச்சர் கே.பி. அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார். ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இந்தத் தகவலை தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், விரைவில் முழுநலம்பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் திரு @KPAnbalaganoffl அவர்கள் #Covid19 -ல் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
— M.K.Stalin (@mkstalin) June 19, 2020
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
Comments